மின் விளக்குகள் அன்பளிப்பாக வழங்கிமை
எமது பாடசாலையின் பாதுகாப்ப கருதி 28.01.2018 அன்று அறுபத்தி ஐந்து ஆயிரம் ரூபா பெறுமதியான மின் விளக்குகளை அன்பளிப்பாக வழங்கி, அவற்றைப் பொருத்திக்கொடுத்த நிகழ்வின் போது,
எமது பாடசாலையின் பாதுகாப்ப கருதி 28.01.2018 அன்று அறுபத்தி ஐந்து ஆயிரம் ரூபா பெறுமதியான மின் விளக்குகளை அன்பளிப்பாக வழங்கி, அவற்றைப் பொருத்திக்கொடுத்த நிகழ்வின் போது,
05.06.2014 அன்று நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் உயர்தரம் 2014 கலைப்பிரிவு மாணவர்களினால் “தமிழ்த்தாய் வாழ்த்துப் பலகை” ( Flex Board ) ஒன்று பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அது மூன்றரை ஆண்டுகளின் பின் பழுதடைந்த நிலையில் காணப்பட்டமையினால் 16.01.2018 அன்று பழுதடைந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பலகையை ( Flex Board ) புதிதாக வடிவமைத்து, பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
க.பொ.த சா.த மாணவர்களுக்கு ஆங்கில பாடத்திற்கான வலுவூட்டற் வகுப்புகள் பழைய மாணவர் மன்றத்தின் அனுசரனையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவரினால் நடாத்தப்பட்டதுடன், க.பொ.த சா.த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் கணித பாடத்தில் 40 புள்ளிகளுக்கு குறைவாக பெற்ற மாணவர்களின் அடைவ மட்டத்தை அதிகரிக்கும் முகமாக வலுவூட்டற் வகுப்புகள் பழைய மாணவர் மன்றத்தின் அனுசரனையுடன் இரு ஆசிரியர்களைக் கொண்டு நடாத்தப்பட்டது.
பழைய மாணவர் மன்றத்தின் அனுசரனையில் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான கருத்தரங்கின் இரண்டாம் நாள் அமர்வு இன்று 02-12-2022 வெள்ளிக்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.வளவாளராக யாழ்.பிரபல ஆசான் திரு.பத்மராஜா பங்கேற்று சிறப்பாக மாணவர்களுக்கு வழிகாட்டினார்.இக்கருத்தரங்கை சிறப்பாக நடாத்தி முடிக்க உதவிய, கல்லூரி அதிபர், ஆரம்ப பிரிவிற்கான ஆசிரிய ஆலோசகர், இரு நாட்களும் மாணவர்களை நெறிப்படுத்திய தரம் 5 வகுப்பாசிரியர்கள்,உணவு உபசரிப்பை சிறந்த முறையில் ஏற்பாடு செய்த பெற்றோர் ஆகியோருக்கு பழைய மாணவர் மன்றத்தின்…
பலதரப்பட்ட அசாதாரண சூழ்நிலைகளுக்கு எமது நாடு முகம்கொடுக்கும் போதெல்லாம் எமது பாடசாலை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளோம். பொருளாதார நெருக்கடியில் எமது நாடு முகம் கொடுத்த போது பாடசாலை மாணவர்கள் பெருமளவில் போசாக்கு இன்மைக்கு உள்ளானார்கள். இதனை கருத்திற்கொண்டு எமது பாடசாலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 3000 ரூபா வீதம் அத்தியாவசியமான உலர் உணவுப்பொருட்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கு கோப் சிட்டி வவுச்சர்கள் மாதம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டமானது 2022 நவம்பர்…
2022 (2023) பிரிவு உயர்தர மாணவர்களுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடங்களுக்கான கருத்தரங்குகள் யாழ்,கொழும்பு பிரபல வளவாளர்களினால் பழைய மாணவர் மன்றத்தின் அனுசரனையுடன் நடாத்தப்பட்டது.
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பொன்விழா காணும் பழைய மாணவர் மன்றத்தினால் சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட (volleyball) போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்ட மாணவர்கள் எதிர்பாராத அளவு தங்களது திறமைகளை வெளிகாட்டினார்கள். அத்துடன் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவர்களது பரிபூரண ஒத்துழைப்பை வழங்கியதுடன் பழைய மாணவர் மன்றத்திற்கு தமது நன்றி கலந்த பாராட்டினையும் தெரிவித்தனர். On the occasion of Children’s Day, the Golden…
2004ம் ஆண்டு எமது பாடசாலையின் பொன் விழாவை முன்னிட்டு பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முகமாக சினேக பூர்வ மென்பந்து கிரிக்கெடட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை (16 ஆண்டுகள்) தொடர்ச்சியாக மென்மேலும் மெருகூட்டப்பபட்டு எமது பழைய மாணவர்களின் குடும்ப விழாவாக நடைபெற்று வருகிறது. இவ்வருடமும் 28 அணிகளுடன் 5 மகளீர் அணிகளும் பங்குபற்றி சிறப்பித்து இருந்தனர். அத்துடன் போட்டியாளர்களும், பார்வையாளர்களுமாக 500 பேர் கலந்து சிறப்பித்த நிலையில் பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிகழ்வினை மெருகூட்டியிருந்தன.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு 18.9.2022 அன்று பழைய மாணவர் மன்றத்தின் அனுசரனையுடன் எமது கல்லூரி மாணவர்களின் 24 அணிகளைகொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி நீர்கொழும்பு கோட்டை மைதானத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். On the occasion of International Children’s Day on 18th September 2022, under the auspices of the Alumni Association, a softball cricket tournament was held at…
எமது பாடசாலையின் 2018 ஆண்டு இல்ல விளையாட்டுப் போட்டிக்கு ஒன்றரை இலட்சம் பெறுமதியான உயரம் பாய்வதற்கு பயன்படுத்தப்படும் இறப்பர் மெத்தைகள் இரண்டு ( High Jump Landing Pads ) 22.01.2018 திங்கட்கிழமை அன்று வழங்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற அகில இலங்கை கராத்தே சுற்றுப்போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களின் விபரம் ALL ISLAND OPEN KARATE CHAMPIONSHIP 2023SUGADADAASA INDOOR STADIUM.16/02/2023MEDALS
பாடசாலை வழாகத்தினுள் பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் மற்றுமொரு நிகழ்வாக மகளீருக்கு வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியும், ஆடவருக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியும் முதன் முதலாக 27.11.2022 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
எமது பாடசாலையில் விளையாட்டடு அபிவிருத்தியின் ஒரு அம்சமாக கரப்பந்தாட்டத்தை ஊக்குவிப்பதற்காக நேர்த்தியான முறையில் பயிற்சியினை வழங்குவதற்காக அகில இலங்கை ரீதியில் தேர்ச்சி பெற்ற பயிற்றுவிப்பாளரை நியமித்து சிறந்த கரப்பந்தாட்ட அணியை உருவாக்பியுள்ளோம். அத்துடன் கரப்பந்தாட்ட அணிக்கு தேவையான சகல உபகரணங்களையும் எமது பழைய மாணவர் மன்றத்தினால் வழங்கப்பட்டது. மேலும் எமது முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்ட இவ்வணியானது நீர்கொழும்பில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றுடன் பயிற்சிப் போட்டியில் பங்குபற்றி வெற்றிவாகை சூடியது.
இன்றைய தினம் எமது பாடசாலை மாணவிகளுக்கும் நீர்கொழும்பு சென் ஜோசப் கல்லூரி மாணவிகளுக்கும் இடையிலான வலைப்பந்தாட்ட போட்டியில் எமது மாணவிகள் சிறப்பாக செயல்பட்டனர். Under 13 – 14 இற்கு 1 என்ற கணக்கிலும் Under 16 – 5 இற்கு 2 என்ற கணக்கிலும் Under – 18 – 4 இற்கு 2 என்ற கணக்கிலும் ஏனைய நட்பு ரீதியாக பயிற்சிக்காக வயதெல்லை இன்றி இடம்பெற்ற 3 போட்டிகளில் 2 போட்டிகளிலும் வெற்றியீட்டினர்.
பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளுக்கு எமது பூரண ஆதரவினை பலதரப்பட்ட சரீர உதவியாகவும், எமது வருடாந்த நிதி பங்களிப்பினையும் வழங்கி வருகிறோம்.
2019 இல் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலின் பின்னரான பாதுகாப்பு நிலமையினை கருத்தில் கொண்டு துரிதமாக செயல் பட்ட அன்று இருந்த ஆட்சி மன்றத்தினால் CCTV உபகரணங்கள் பாடசாலையை சுற்றி பொருத்தி கொடுக்கப்பட்டது. இப்பாதுகாப்பு உபகரணகளின் மேம்படுத்தல் மற்றும் பராமதித்தல் பணிகளை எமது மன்றம் செயற்படுத்ததி வருகிறது.
பழைய மாணவர் மன்றத்தினால் தரம் – 5 – புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக கேடயங்கள் , பதக்கங்கள் மற்றும் சன்றிதழ்களும் ஒளிவிழா தினம் அன்று பாடசலையில் வழங்கப்பட்டது. Shields, medals, and certificates were also presented by the Alumni Association to encourage the students who have excelled in the academic examinations on the day of the Light Festival.
2016ம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்ககளை கௌரவப்படுத்தி கேடயம், பரிசுகள் 06.12.2017 அன்று வழங்கியமை.
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் மாணவர்களில் கராத்தே பயிற்ச்சி பெறும் மாணவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் மூலம் அனுசரனை, ஒருங்கிணைப்பு, சுய ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு மற்றும் நேர்மையான எதிர்காலத்துக்கான ஆரோக்கியமான வலுவுடைய சமுதாயம் ஒன்றை உருவாக்குதல். ஆகிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு பழைய மாணவர் மன்றத்தின் விளையாட்டு அபிவிருத்தி குழுவின் பரிந்துரையின் பேரில் முன்மொழியப்பட்ட வேலைத்திட்டம் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் மாணவர்களில் கராத்தே பயிற்ச்சி பெறும் மாணவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப்…