சீர்மியம் /வழிப்படுத்தல் (Counseling – கவுன்சிலிங்) கருத்தரங்குகள்*
இன்றைய அவசர உலகிலே ஒவ்வொருவரும் பல்வேறுபட்ட மன அழுத்தங்களுக்கு முகம் கொடுப்பதன் காரணமாக கவுன்சிலிங் இற்கான முக்கியத்துவம் அனைவராலும் உணரப்படுகிறது. இதனைக் கருத்திற்கொண்டு, கடந்த 2023-05-12 மற்றும் 2023-05-13 எமது பாடசாலையில் கவுன்சிலிங் தொடர்பான கருத்தரங்குகள் பழைய மாணவர் சங்கத்தின் (OSA) ஏற்பாட்டில் நடைபெற்றது.
கருத்தரங்கானது வெள்ளிக்கிழமையன்றும் சனிக்கிழமையன்றும் 8 நிகழ்வுகளாக காலை 8 மணிமுதல் மாலை 4 மணி வரை நடாத்தப்பட்டது. இக் கருத்தரங்கில் 500 க்கு மேற்பட்ட மாணவர்களும் 500 க்கு மேற்பட்ட பெற்றோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந் நிகழ்வு மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் கருத்தரங்கை வழிநடாத்திய வளவாளரும் உளவியல் ஆலோசகரும் பரகடுவ புஸ்சள்ள தமிழ் வித்தியாலய அதிபருமான திரு. தோமஸ்குரே அவர்கள் இந்த நிகழ்வை திறம்பட நடாத்தித் தந்திருந்தார்.
மாணவர்களுக்கு,
- பதின்ம வயதில் ஏற்படும் மாற்றம் அதனைக் கையாளும் விதம், அடுத்தவருடன் பழகும் விதம், மற்றும் சரியானமுடையில் தொடர்பு கொள்ளாவிட்டால் ஏற்படும் விபரீத விளைவுகள்
- தவறுகளை எப்படி தவிர்க்கலாம்
- இலகு கற்றல் நுட்பங்கள் அதற்கான ஆலோசனை வழிகாட்டல்
- வீட்டிலிருந்து நான்…
போன்ற விடயங்கள் கவுன்சிலிங் கருத்தரங்கில் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
பெற்றோர்களுக்கு, - பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான இடைவெளி
- பதின்ம வயதுப் பிள்ளைகள்
- தற்கொலையும் பதின்ம பருவ பிள்ளைகளும்
- பிள்ளைகளுக்காக நாம்…
போன்ற தலைப்புகளில் பெற்றோருக்கான கவுன்சிலிங் கருத்தரங்கு நடைபெற்றது.
இக் கருத்தரங்கானது மாணவர்களுக்கிடையிலும் பெற்றோர்களுக்கிடையிலுமான கருத்துப்பரிமாற்றப் பாலமாக இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். அதுமட்டுமல்லாது கவுன்சிலிங் இற்கான கருத்தரங்கு வெற்றியளித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


