இலங்கையில் உள்ள பாடசாலைகளிலேயே அதி நவீன கணனி ஆய்வுகூடம் எமது பாடசாலையில் 2016 இலே அன்று இருந்த பழைய மாணவர் மன்றத்தால் 20 கணனிகள் மற்றும் அதன் தொடர்புடைய நவீன கருவிகள் மற்றும் உட்கட்டமைப்பு வவசதிகளுடன் அமைத்துக்கொடுக்கப்பட்டது.
மேலும் இவ் ஆய்வுகூடத்தின் தரத்தினை பேணும் பொருட்டு அதற்கு தேவையான மேம்படுத்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை எம் மன்றம் மேற்கொண்டு வருகிறது.


நவீன உலகில் தொழில்நுட்டபமானது அதி முக்கியமான அம்சமாக உள்ளது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவானது மாணவர்களின் முன்னேற்றகரமான எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானதென்பதால் பிரத்தியேக ஆசிரியர் ஒருவரை நியமித்து தரம் 6இல் இருந்து தரம் 9 வரை தகவல்தொழில்நுட்ப கல்வியை வழங்கி வருகிறோம்.




