நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் மன்றத்தின் பொன் விழாவின் ஓர் அம்சமாக (வேலைத்திட்டம் 11) சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலையின் 68ம் ஆண்டு அகவை நாளையும் நினைவூட்டி கடந்த 07-10-2022 விசேட நிகழ்வொன்று பழைய மாணவர் மன்றத்தின் பூரண அனுசரணையுடன் வெகு விமர்சையாக பாடசாலையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வினை சிறப்பித்த எமது பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலை பழைய மாணவர் மன்றம் சார்பாக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.





