2004ம் ஆண்டு எமது பாடசாலையின் பொன் விழாவை முன்னிட்டு பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முகமாக சினேக பூர்வ மென்பந்து கிரிக்கெடட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை (16 ஆண்டுகள்) தொடர்ச்சியாக மென்மேலும் மெருகூட்டப்பபட்டு எமது பழைய மாணவர்களின் குடும்ப விழாவாக நடைபெற்று வருகிறது.
இவ்வருடமும் 28 அணிகளுடன் 5 மகளீர் அணிகளும் பங்குபற்றி சிறப்பித்து இருந்தனர்.
அத்துடன் போட்டியாளர்களும், பார்வையாளர்களுமாக 500 பேர் கலந்து சிறப்பித்த நிலையில் பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிகழ்வினை மெருகூட்டியிருந்தன.









