எமது பாடசாலையில் விளையாட்டடு அபிவிருத்தியின் ஒரு அம்சமாக வலைப்பந்தை ஊக்குவிப்பதற்காக நேர்த்தியான முறையில் பயிற்சியினை வழங்குவதற்காக அகில இலங்கை ரீதியில் தேர்ச்சி பெற்ற பயிற்றுவிப்பாளரை நியமித்து சிறந்த வலைப்பந்தாட்ட அணியை உருவாக்கியுள்ளோம்.
அத்துடன் வலைப்பந்தாட்ட அணிக்கு தேவையான சகல உபகரணங்களையும் எமது பழைய மாணவர் மன்றத்தினால் வழங்கப்பட்டது.
மேலும் எமது முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்ட இவ்வணியானது நீர்கொழும்பில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றுடன் பயிற்சிப் போட்டியில் பங்குபற்றி வெற்றிவாகை சூடியது.


