பழைய மாணவர் மன்றத்தின் அனுசரனையில் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான கருத்தரங்கின் இரண்டாம் நாள் அமர்வு இன்று 02-12-2022 வெள்ளிக்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
வளவாளராக யாழ்.பிரபல ஆசான் திரு.பத்மராஜா பங்கேற்று சிறப்பாக மாணவர்களுக்கு வழிகாட்டினார்.
இக்கருத்தரங்கை சிறப்பாக நடாத்தி முடிக்க உதவிய, கல்லூரி அதிபர், ஆரம்ப பிரிவிற்கான ஆசிரிய ஆலோசகர், இரு நாட்களும் மாணவர்களை நெறிப்படுத்திய தரம் 5 வகுப்பாசிரியர்கள்,உணவு உபசரிப்பை சிறந்த முறையில் ஏற்பாடு செய்த பெற்றோர் ஆகியோருக்கு பழைய மாணவர் மன்றத்தின் கல்வி அபிவிருத்திப் பிரிவு உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இந்த வேலைத்திட்டத்திற்காக 10 மாதிரி வினாப்பத்திரங்கள்,கருத்தரங்கு வினாத்தாள்,வளவாளர் கொடுப்பனவுக்காக ரூ.110,000/- நிதியினை பழைய மாணவ மன்றத்தின் நிதிக்குழு அங்கீகரித்து வழங்கியது.


The second-day session of the scholarship examination seminar for class 5 students was held on Friday, 02-12-2022, in the college hall under the auspices of the Alumni Association. Mr. Padmaraja, a renowned teacher from Jaffna, participated as the resource person and provided excellent guidance to the students. The Educational Development Section of the Alumni Association would like to express its sincere gratitude to the Principal of the College, the Faculty Advisor for the Primary Section, the Class 5 teachers who guided the students on both days, and the parents who organized the food in the best possible way for their invaluable assistance in successfully conducting this seminar. The finance committee of the Alumni Association approved and provided a fund of Rs.110,000/- for 10 model question papers, seminar question paper, and resource allowance for this project.
