Annual Volleyball & Netball Tournaments

பாடசாலை வழாகத்தினுள் பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் மற்றுமொரு நிகழ்வாக மகளீருக்கு வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியும், ஆடவருக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியும் முதன் முதலாக 27.11.2022 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

Read More
Annual Cricket

Annual Cricket Tournament

2004ம் ஆண்டு எமது பாடசாலையின் பொன் விழாவை முன்னிட்டு பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முகமாக சினேக பூர்வ மென்பந்து கிரிக்கெடட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை (16 ஆண்டுகள்) தொடர்ச்சியாக மென்மேலும் மெருகூட்டப்பபட்டு எமது பழைய மாணவர்களின் குடும்ப விழாவாக நடைபெற்று வருகிறது. இவ்வருடமும் 28 அணிகளுடன் 5 மகளீர் அணிகளும் பங்குபற்றி சிறப்பித்து இருந்தனர். அத்துடன் போட்டியாளர்களும், பார்வையாளர்களுமாக 500 பேர் கலந்து சிறப்பித்த நிலையில் பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிகழ்வினை மெருகூட்டியிருந்தன.

Read More
Childrens Day

Children’s Day – 2022

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் மன்றத்தின் பொன் விழாவின் ஓர் அம்சமாக (வேலைத்திட்டம் 11) சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலையின் 68ம் ஆண்டு அகவை நாளையும் நினைவூட்டி கடந்த 07-10-2022 விசேட நிகழ்வொன்று பழைய மாணவர் மன்றத்தின் பூரண அனுசரணையுடன் வெகு விமர்சையாக பாடசாலையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வினை சிறப்பித்த எமது பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலை பழைய மாணவர் மன்றம் சார்பாக…

Read More

Annual Sport Meet

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளுக்கு எமது பூரண ஆதரவினை பலதரப்பட்ட சரீர உதவியாகவும், எமது வருடாந்த நிதி பங்களிப்பினையும் வழங்கி வருகிறோம்.

Read More

CCTV Installation

2019 இல் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலின் பின்னரான பாதுகாப்பு நிலமையினை கருத்தில் கொண்டு துரிதமாக செயல் பட்ட அன்று இருந்த ஆட்சி மன்றத்தினால் CCTV உபகரணங்கள் பாடசாலையை சுற்றி பொருத்தி கொடுக்கப்பட்டது. இப்பாதுகாப்பு உபகரணகளின் மேம்படுத்தல் மற்றும் பராமதித்தல் பணிகளை எமது மன்றம் செயற்படுத்ததி வருகிறது.

Read More

Computer Lab

இலங்கையில் உள்ள பாடசாலைகளிலேயே அதி நவீன கணனி ஆய்வுகூடம் எமது பாடசாலையில் 2016 இலே அன்று இருந்த பழைய மாணவர் மன்றத்தால் 20 கணனிகள் மற்றும் அதன் தொடர்புடைய நவீன கருவிகள் மற்றும் உட்கட்டமைப்பு வவசதிகளுடன் அமைத்துக்கொடுக்கப்பட்டது. மேலும் இவ் ஆய்வுகூடத்தின் தரத்தினை பேணும் பொருட்டு அதற்கு தேவையான மேம்படுத்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை எம் மன்றம் மேற்கொண்டு வருகிறது. நவீன உலகில் தொழில்நுட்டபமானது அதி முக்கியமான அம்சமாக உள்ளது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவானது மாணவர்களின்…

Read More

G.C.E. (O/L) Supporting Classes

க.பொ.த சா.த மாணவர்களுக்கு ஆங்கில பாடத்திற்கான வலுவூட்டற் வகுப்புகள் பழைய மாணவர் மன்றத்தின் அனுசரனையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவரினால் நடாத்தப்பட்டதுடன், க.பொ.த சா.த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் கணித பாடத்தில் 40 புள்ளிகளுக்கு குறைவாக பெற்ற மாணவர்களின் அடைவ மட்டத்தை அதிகரிக்கும் முகமாக வலுவூட்டற் வகுப்புகள் பழைய மாணவர் மன்றத்தின் அனுசரனையுடன் இரு ஆசிரியர்களைக் கொண்டு நடாத்தப்பட்டது.

Read More

G.C.E. (A/L) Support Seminar -2022

2022 (2023) பிரிவு உயர்தர மாணவர்களுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடங்களுக்கான கருத்தரங்குகள் யாழ்,கொழும்பு பிரபல வளவாளர்களினால் பழைய மாணவர் மன்றத்தின் அனுசரனையுடன் நடாத்தப்பட்டது.

Read More

Netball Team

எமது பாடசாலையில் விளையாட்டடு அபிவிருத்தியின் ஒரு அம்சமாக வலைப்பந்தை ஊக்குவிப்பதற்காக நேர்த்தியான முறையில் பயிற்சியினை வழங்குவதற்காக அகில இலங்கை ரீதியில் தேர்ச்சி பெற்ற பயிற்றுவிப்பாளரை நியமித்து சிறந்த வலைப்பந்தாட்ட அணியை உருவாக்கியுள்ளோம். அத்துடன் வலைப்பந்தாட்ட அணிக்கு தேவையான சகல உபகரணங்களையும் எமது பழைய மாணவர் மன்றத்தினால் வழங்கப்பட்டது. மேலும் எமது முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்ட இவ்வணியானது நீர்கொழும்பில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றுடன் பயிற்சிப் போட்டியில் பங்குபற்றி வெற்றிவாகை சூடியது.

Read More

Donations of Volleyball Game Equipment’s

எமது பாடசாலையில் விளையாட்டடு அபிவிருத்தியின் ஒரு அம்சமாக கரப்பந்தாட்டத்தை ஊக்குவிப்பதற்காக நேர்த்தியான முறையில் பயிற்சியினை வழங்குவதற்காக அகில இலங்கை ரீதியில் தேர்ச்சி பெற்ற பயிற்றுவிப்பாளரை நியமித்து சிறந்த கரப்பந்தாட்ட அணியை உருவாக்பியுள்ளோம். அத்துடன் கரப்பந்தாட்ட அணிக்கு தேவையான சகல உபகரணங்களையும் எமது பழைய மாணவர் மன்றத்தினால் வழங்கப்பட்டது. மேலும் எமது முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்ட இவ்வணியானது நீர்கொழும்பில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றுடன் பயிற்சிப் போட்டியில் பங்குபற்றி வெற்றிவாகை சூடியது.

Read More

MEIJI CUP 2022

11/12/2022 வென்னப்புவயில் நடைபெற்ற கராத்தே போட்டியில் எமது பாடசாலையின் கராத்தே குழுவின் பத்தொன்பது மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் எமது பாடசாலையின் இரண்டு மாணவர்கள் தங்கப் பதக்கங்களையும், இரண்டு மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்களையும், பத்து மாணவர்கள் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றனர். அந்த மாணவர்களுக்கும் , பயிற்றுவிப்பாளருக்கும், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 🟡GOLD MEDALB. LEIROJAN 7 BS. KRITHIHAN 8 A ⚪️SILVER MEDALK. LITHARSKANTH 7 AJ. SUJITH 7 A 🟠BRONZE MEDALV. THEJAS 3…

Read More

Food and Stationeries and Shoes Voucher

பலதரப்பட்ட அசாதாரண சூழ்நிலைகளுக்கு எமது நாடு முகம்கொடுக்கும் போதெல்லாம் எமது பாடசாலை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளோம். பொருளாதார நெருக்கடியில் எமது நாடு முகம் கொடுத்த போது பாடசாலை மாணவர்கள் பெருமளவில் போசாக்கு இன்மைக்கு உள்ளானார்கள். இதனை கருத்திற்கொண்டு எமது பாடசாலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 3000 ரூபா வீதம் அத்தியாவசியமான உலர் உணவுப்பொருட்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கு கோப் சிட்டி வவுச்சர்கள் மாதம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டமானது 2022 நவம்பர்…

Read More

Guidance and Counselling program for Students and Parents

சீர்மியம் /வழிப்படுத்தல் (Counseling – கவுன்சிலிங்) கருத்தரங்குகள்*இன்றைய அவசர உலகிலே ஒவ்வொருவரும் பல்வேறுபட்ட மன அழுத்தங்களுக்கு முகம் கொடுப்பதன் காரணமாக கவுன்சிலிங் இற்கான முக்கியத்துவம் அனைவராலும் உணரப்படுகிறது. இதனைக் கருத்திற்கொண்டு, கடந்த 2023-05-12 மற்றும் 2023-05-13 எமது பாடசாலையில் கவுன்சிலிங் தொடர்பான கருத்தரங்குகள் பழைய மாணவர் சங்கத்தின் (OSA) ஏற்பாட்டில் நடைபெற்றது.கருத்தரங்கானது வெள்ளிக்கிழமையன்றும் சனிக்கிழமையன்றும் 8 நிகழ்வுகளாக காலை 8 மணிமுதல் மாலை 4 மணி வரை நடாத்தப்பட்டது. இக் கருத்தரங்கில் 500 க்கு மேற்பட்ட மாணவர்களும்…

Read More

Career Guidence – Students Counciling and Parental Awareness

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பழைய மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் தரம் 10,11 மாணவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல்களும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வும் தேசிய கல்வி நிறுவனத்தின் ஆலோசகரும் வரிகாப்பு வழவாளருமான திரு. தோமஸ் குரே அவர்களால் எமது பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது இவ் ஆலோசனை வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு செயலமர்வின் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் பயனடைந்தனர். Counseling guidelines for Grade 10 and 11 students…

Read More

GOLDEN JUBILEE VOLLEYBALL TOURNAMENT 2022

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பொன்விழா காணும் பழைய மாணவர் மன்றத்தினால் சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட (volleyball) போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்ட மாணவர்கள் எதிர்பாராத அளவு தங்களது திறமைகளை வெளிகாட்டினார்கள். அத்துடன் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவர்களது பரிபூரண ஒத்துழைப்பை வழங்கியதுடன் பழைய மாணவர் மன்றத்திற்கு தமது நன்றி கலந்த பாராட்டினையும் தெரிவித்தனர். On the occasion of Children’s Day, the Golden…

Read More

GOLDEN JUBILEE CRICKET TOURNAMENT 2022

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு 18.9.2022 அன்று பழைய மாணவர் மன்றத்தின் அனுசரனையுடன் எமது கல்லூரி மாணவர்களின் 24 அணிகளைகொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி நீர்கொழும்பு கோட்டை மைதானத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். On the occasion of International Children’s Day on 18th September 2022, under the auspices of the Alumni Association, a softball cricket tournament was held at…

Read More

ALL ISLAND OPEN KARATE CHAMPIONSHIP 2023

கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற அகில இலங்கை கராத்தே சுற்றுப்போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களின் விபரம் ALL ISLAND OPEN KARATE CHAMPIONSHIP 2023SUGADADAASA INDOOR STADIUM.16/02/2023MEDALS

Read More

DONATION OF MATS TO KARATE TRAINEES

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் மாணவர்களில் கராத்தே பயிற்ச்சி பெறும் மாணவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் மூலம் அனுசரனை, ஒருங்கிணைப்பு, சுய ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு மற்றும் நேர்மையான எதிர்காலத்துக்கான ஆரோக்கியமான வலுவுடைய சமுதாயம் ஒன்றை உருவாக்குதல். ஆகிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு பழைய மாணவர் மன்றத்தின் விளையாட்டு அபிவிருத்தி குழுவின் பரிந்துரையின் பேரில் முன்மொழியப்பட்ட வேலைத்திட்டம் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் மாணவர்களில் கராத்தே பயிற்ச்சி பெறும் மாணவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப்…

Read More

SCHOLARSHIP AWARD CEREMONY – 2022

பழைய மாணவர் மன்றத்தினால் தரம் – 5 – புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக கேடயங்கள் , பதக்கங்கள் மற்றும் சன்றிதழ்களும் ஒளிவிழா தினம் அன்று பாடசலையில் வழங்கப்பட்டது. Shields, medals, and certificates were also presented by the Alumni Association to encourage the students who have excelled in the academic examinations on the day of the Light Festival.

Read More